
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது மார்ச் 26-ம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
‘டாக்டர்’ படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இந்த படத்தின் மூன்றாவது பாடலான சோ பேபி பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று வருகிறது.
கடந்த 25ஆம் தேதி வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த பாடல் ரிலீஸ் ஆகி இதுவரை 5 மில்லியன் பாரவையாளர்களை பெற்று வேகமாக இந்த சாதனையை செய்யும் சிவகார்த்திகேயன் பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.
[youtube-feed feed=1]Whoo hoo… Whopping 5 million real-time views for #SoBaby🥳
🎶 @anirudhofficial
✍🏼 @Siva_Kartikeyan
🎙️ @anirudhofficial & @ananthkrrishnan#DOCTOR | @KalaiArasu_ | @kjr_studios | @Nelsondilpkumar | @priyankaamohan | #RajeshVaidhiya | @SonyMusicSouth pic.twitter.com/FGlPfUQxAj— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 27, 2021