சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகா ரவியை ஜூலை 29 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமணத்தை நடிகர் கமல் ஹாசன் முன்நின்று நடத்தி வைத்தார்.

இந்தத் திருமணத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், மநீம-வின் பழ.கருப்பையா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். அர்ச்சகர் இல்லாமல் நடைப்பெற்ற இந்தத் திருமணத்தில் கமல் தாலி எடுத்துக் கொடுக்க, அதை கன்னிகாவின் கழுத்தில் கட்டினார் சினேகன்.

இந்நிலையில் சினேகன் , கன்னிகா திருமணத்தில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துக்கொள்ள முடியாத காரணத்தால், இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சினேகனுக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.