சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் முதல் ரேசன் அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார்.
2006ம் ஆண்டு ஜெ. முதல்வராக வந்தபோது ரேசன் அட்டைகள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டாக மாற்றப்படும் என்று கூறினார். பின்னர் 2011ம் ஆண்டு ஆட்சி அமைத்தபோதும் 6 மாதத்திற்குள் ஸ்மார்ட்டு வழங்கப்படும் என்று கூறினார். பின்னர் ஒரு வருடமாக மாறியது. அதைத் தொடர்ந்து தற்போது இருக்கும் ரேசன் கார்டு தகவல்களுடன், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவர் மறைந்துவிட்டதால் எடப்பாடி தலைமையின அரசு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வரும் ஏப்ரல் முதல் ரேசன் அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து உள்ளார்.
சென்னையில் இன்று உணவுபொருள் வழங்கல் துறையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் இதுவரை 5.65 கோடி பேர் குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்றும், கூறிய 5 லட்சத்து 41 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 951 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் கூறினார்.
இந்த நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின்போது வரும் ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் பொது விநியோகத்திட்டத்தை முழுமையாக கணினி மயமாக்கிட, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 318 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.