மதுரை: மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று திருப்பரங்குன்றத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது,
மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பீட்டை சரி செய்வதற்காக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இருக்க கூடிய டிஜிட்டல் மின் மீட்டர் முறையை ஸ்மார்ட் முறையாக மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர், இதை இதை இலக்காக கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் இழப்பை ஈடு செய்வதற்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதனை செயல்படுத்துவதற்கான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.