ஸ்மார்ட் சிடி திட்டமும் முந்தைய அதிமுக ஆட்சியும்

சென்ற அ. தி. மு. க. ஆட்சியில், சரியாக திட்டமிடாததாலும் அலட்சியத்தாலும் சென்னை நகர மக்கள் உயிரிழப்பு…. உடைமைகள் என்று பல இன்னல்களை சந்தித்தார்கள்!

அதன் பின்னர் நகர வளர்ச்சிக்கு ” ஸ்மார்ட் சிட்டி” திட்டம் வகுக்கப்பட்டு, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் சுமார் 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது!

ஆனால் வருடங்கள் ஐந்து ஓடியும் அந்தத் திட்டம் முறையாகவே நடக்கவில்லை!

செய்த கொஞ்சம் வேலைகளிலும் ஊழல் அமைச்சர்கள் புகுந்து விளையாடியதால் அந்த வேலைகள் அரைகுறையாக நடந்தன!

அதன் பலனாக இன்று சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்து, மக்கள் பெரும் துன்பங்களில் சிக்கி இருக்கிறார்கள்!

இச்சூழலில் தான், சென்னை நகர மேயராக… உள்ளாட்சித ் துறை… துணை முதல்வராக இருந்த தனது அனுபவங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்!

மக்கள் துயரங்களை நேரடியாகக் கண்டு அவற்றைக் களைந்து கொண்டிருக்கிறார்!

மேலும், “கடந்த ஆட்சியாளர்களின் ஊழல்களை விசாரித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார்…

மக்கள் இதை வரவேற்கிறார்கள்!

** தமிழக பா. ஜ. க. தலைவர்களே கொஞ்சம் தமாஷ் பேர்வழிகள்! அதிலும், தற்போதைய தலைவர் அண்ணாமலை கொஞ்சம் ஓவர்!

தரமான பேச்சுக்கும், நடத்தைக்கும் இவருக்கும் ரொம்ப தூரம்!

இப்படித்தான் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில், வெறும் முட்டிக் கால் அளவே இருந்த தண்ணீரில் ‘படகு விட்டு’ அதில் ஏறிக் கொண்டு தமிழக அரசைக் கிண்டல் அடிக்கிறார!

மக்களோ, ” தொலைந்து” விட்ட தனது “ஆட்டுக் குட்டியை ( தமிழக பா. ஜ. க.) த் தேடுகிறார் அண்ணாமலை… ” என்று கிண்டலடிக்கிறார்கள்!

ஓவியர் இரா. பாரி