பூமியை அழிக்க வரும் புது ஆபத்து…..விஞ்ஞாணி எச்சரிக்கை

Must read

பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சிறுகோள்கள் பூமியை நோக்கி விரைவில் வர வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய மண்டலத்தில் நடக்கும் பல ஆச்சரிய விஷயங்களை நாசா வெளிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய தகவலை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக விஞ்ஞானி ஜோசப் நூத் கூறியது… பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் திறன் கொண்ட சிறு கோள்கள் பூமியை நோக்கி வருவதற்கான அறிகுறி தெரிகிறது.
 
இதுபோல் கடந்த 1996, 2014ம் ஆண்டுகளில் நடந்துள்ளது. ஆனால் அப்போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சூரிய மண்டலத்தில் செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கு இடையே ஆயிரக்கணக்கில் சிறு கோள்கள், மற்ற கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வருகிறது.
இவற்றில் சில கோள்கள் ஒரு பெரிய மலையின் அளவை கொண்டிருக்கும். அவை பூமி மீது மோதினால் கற்பனைக்கு எட்டாத வகையிலான அழிவுகள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளர்.
இது அடுத்த ஆண்டு 2017ம் ஆண்டில் ஆரம்பித்து 2113ம் ஆண்டிற்குள் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோசப் நூத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More articles

Latest article