வெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். இங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ 100 பொலிவர் நோட்டுக்களை தடைசெய்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் நாட்டின் 300 கோடி மதிப்பிலான 100 பொலிவார் நோட்டுகளை கடத்தல்காரர்கள் பதுக்கி வைத்துள்ளதாகவும் அந்த பழைய நோட்டுக்களை தடைசெய்வதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை முடக்கி வைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

[embedyt] http://www.youtube.com/watch?v=oiPq1ST2s1g[/embedyt]

இதன் விளைவாக அந்நாட்டில் பணத்தட்டுப்பாடு மேலும் அதிகமானது. ஏடிஎம் மையங்களில் பணம் தீர்ந்து, கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்க இயலாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பொறுமையிழந்த மக்கள் வன்முறையிலும் கொள்ளையிலும் இறங்கினார்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் இறங்கி கடைகளை கொள்ளையிட்டார்கள். 100 பொலிவார் நோட்டுக்களை தெருக்களில் வீசி எறிந்து வன்முறையில் குதிக்கவே நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இதையொட்டி 300 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
நாட்டின் 90 சதவிகித உணவு விடுதிகள் பொதுமக்களால் சூறையாடப்பட்டதையடுத்து நிலைமை விபரீதமாவதை உணர்ந்த வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடனடியாக 100 பொலிவார் கரன்சி நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வருகிற ஜனவரி 2ம் தேதி வரை 100 பொலிவார் கரன்சி நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா அதிபர் இந்த கலவரம் அமெரிக்காவால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.