ரஷ்யாவின் சைபீரியாவில் ஏர்கூட்ஸ்க் நகரில் போதைக்காக மெத்தனால் கலந்த சோப்பு திரவத்தை குடித்த 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

“இது வெளிப்புற உபயோகத்துக்கு மட்டும்” என்று பாட்டிலில் தெளிவாக எழுதப்பட்டிருந்தும் வோட்காவுக்கு மாற்றாக கருதி இந்த சோப்பு திரவம் குடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபானம் வாங்கி குடிக்க வசதியில்லாத ஏழைகள் இதுபோன்ற ஆபத்தான மாற்று வழிகளை கையாண்டு அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது ரஷ்யாவில் பெருகிவருவதாக தெரிகிறது. ஆனால் இந்த ஏர்கூட்ஸ்க் சம்பவம் இதுவரை நடந்த உயிரிழப்புகளிலேயே மோசமானதாக கருதப்படுகிறது.