நியூயார்க்:
நியூயார்க் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:-
தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தான். புதினுக்கு எனக்கும் இருக்கும் தனிப்பட்ட பகை காரணமாக தான் அவர் அதிபர் தேர்தலில் தலையிட்டு எனக்கு எதிராக செயல்பட்டுள்ளார். என்னோடு பகைமை காரணமாக அவர் நம் நாட்டினுடைய தேர்தல் முறைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக செயல்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2011&ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த பாராளுமன்றத் தேர்தல் ஒரு மோசடி என ஹிலாரி கிளிண்டன் குறற்ம்சாட்டியிருந்தார். இதனால் ரஷ்யாவில் ஹிலாரிக்கு எதிராக தேசிய அளவிலான போராட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஜனாதிபதி புதினும் அப்போது கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தால் இருவருக்கும் இடையே பகை உருவானது என கூறப்படுகிறது. ஹிலாரி கிலிண்டடை தேர்தலில் தோல்வி அடைந்தன் மூலம் புதின் பழி தீர்த்துக் கொண்டார் என்றே பேசப்படுகிறது.