வளைகுடா நாடுகளில் பணி: 2 ஆண்டில் 58 ஆயிரம் பேருக்கு குடியேற்ற அனுமதி வழங்கல்: மத்திய அரசு தகவல்

Must read

டெல்லி:
டந்த 2 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு செல்வதற்கு 58 ஆயிரம் பேருக்கு குடியேற்ற தடை யில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என வெளியுறவுத் துறை இணை  அமைச்சர் வி.கே.சிங் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
வெளியுறவு துறை அமைச்சர் வி.கே. சிங் ராஜ்யசபாவில் பேசியது…. சவுதி அரேபியாவில் உள்ள வேலை அளிப்பவர்கள் தங்களை சட்டவிரோதமாக நடத்தியதாக இந்திய தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த  2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை வீட்டு வேலைக்குச் செல்லும் இந்திய உள்நாட்டு தொழிலாளர்கள் 58  ஆயிரத்து 163 பேருக்கு வளைகுடா நாடுகளில் பணியாற்றுவதற்கான குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் துன்புறுத்தப்ப டுவதாக புகார்கள் வந்துள்ளது. குடியேற்ற சான்று தேவைப்படும் பாஸ்போர்ட்கள் வைத்துள்ள நபர்களில்  நர்ஸ் பணிக்கு தவிர இதர பணிகளுக்கு வயது வரம்பு 30 ஆண்டுகள் என்பது ஒழுங்குபடுத்தப்படும். கட ந்த ஆகஸ்ட் மாதம் வரை இத்தகைய பாஸ்போர்ட் வைத்துள்ள  பெண்களுக்கு குடியேற்ற சான்று  வழங்கப்பட்டுள்ளது.
31.73 மில்லியன் இந்தியர்கள் 207 நாடுகளில் வசிக்கின்றனர். இதில் 13.45 மில்லயன் பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். 17.85 மில்லியன் பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். 2012ம் ஆண்டு முதல், கடந்த  டிசமபர் 5ம் தேதி வரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்ட்கள் மீது ஆயிரத்து 121 புகார்கள்  வந்துள்ளது. இதில் 973 புகார்கள் மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று  கூறினார்.

விவாகரத்து, அல்லது தனியாக வசிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் இருப்பது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், விண்ணப்பத்தில் தாய், தந்தை பெயர்களை  விண்ணப்ப தாரர் நேரில் குறிப்பிட முடியாது. சிறுவர், சிறுமியர் பாஸ்போர்ட் விண்ணப்பத்தோடு. ஹெச்  என்ற இணைப்பு விண்ணப்பத்தில் தாய், தந்தை அல்லது பாதுகாவலர் கையொப்பம் இட வேண்டும்.
இதில் ஒருவர் இல்லை என்றாலும்,மாஜிஸ்திரேட் முன்னிலையில் பெறப்பட்ட அப்பிடவிட் சமர்ப்பிக்க  வேண்டும் என்றார்.

More articles

Latest article