சென்னை,

சென்னையில் விரைவில் எலக்ட்ரிக் பேருந்துகளும், படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

நேற்று அமைச்சர்  தலைமையில், நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13 -ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த 94 பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

இன்னும் ஓரிரு பேச்சுவார்த்தைகளில், 13 -ஆவது ஊதிய ஒப்பந்த உடன்பாடு ஏற்பட்டுவிடும். வரும் 12 அல்லது 13 -ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

சென்னையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கு ஏதுவாக, மாதிரி ஓட்டத்தை நடத்து வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து இரண்டு நிறுவனங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்

அரசு போக்குவரத்துக் கழகங்களில் படுக்கை வசதியுடன்கூடிய பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.