
விருதுநகர்:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் ஆகியோரை முகநூலில் அவதூறு செய்ததாக ஆறு பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி இந்த புகாரை அளித்துள்ளார். புகாரில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எம்.எல்.ஏ., சுப்பிரமணியனுக்கும், அரசாங்கத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், நல்லமநாயக்கன்பட்டி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த வினோசுரா, மணிகண்டன், சதீஷ்குமார், கண்ணன், சந்தனகுரு, வைரமுத்து ஆகிய ஆறுபேர் மீது அளிக்கப்பட்டுள்ள இந்தபுகாரின் பேரில் காவல்துறையினர் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளனர்.
[youtube-feed feed=1]