டில்லி

னியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் வெதர் 2019 ஆம் வருடம் வழக்கத்டை விட குறைவாக மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்த வரை பொதுவாக வடக்கு மாநிலங்களில் ஜுன் முதல் செப்டம்பர் வரை பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை குறித்த அறிவிப்புக்களை பல தனியார் வானிலை ஆய்வு மையங்களும் அளித்து வருகின்றன. இதில் ஸ்கைமெட் வெதர் அளிக்கும் வானிலை முன்னறிவிப்பு சரியாக அமைந்து வருகிறது. இந்த மையம் உலகில் உள்ள பெருங்கடல்களில் ஏற்படும் அலை ஓட்டத்தை கொண்டு கணக்கிடுகிறது.

அந்த வகையில் தற்போது பசிபிக் பெருங்கடலில் ஈஐ நினோ நிலை நிலவுகிறதாக கூறபடுகிறது. இந்த நிலையைக் கொண்டு இந்த மையம் 2019 ஆம் வருடம் வழக்கத்தை விட இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை குறைவான பருவ மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வழக்கமான மழையைக் காட்டிலும் தற்போது 93% மழை மட்டுமே பெய்ய வாய்ப்புளது.

ஈஐ நினோ நிலை இந்தியாவில் பருவ மழையை குறைக்கும். அதே வேளையில் எல்ஏ நினோ நிலை இருந்தால் இந்தியாவில் பருவமழை அதிகரிக்கும். ஏற்கனவே இந்தியாவில் ஏற்பட்ட மழை இல்லா பஞ்ச காலங்கள் அனைத்தும் ஈஐ நினோ நிலையில் நிகழ்ந்துள்ளது. ஆகவே தற்போதும் மழை இல்லாத பஞ்ச நிலை ஏற்படலாம் என ஸ்கைமெட் எச்சரித்துள்ளது.

தேசிய பெருங்கடல் தட்பவெட்ப நிலை ஆய்வுக் கழகம் கடந்த பிப்ரவரியில் 2019 ஆம் வருடம் ஈஐ நினோ நிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. அதைப் போல் ஸ்கைமெட் மையமும் சாதாரண ஈஐ நினோ நிலை கூட இந்திய பருவமழையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தற்போது பருவ மழை மேலும் பாதிப்படையும் என தெரிவித்துள்ளது.