சென்னை:
தெற்கு ரயில்வேக்கு, ‘ஸ்கோச் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து ஸ்கோச் அமைப்பு விருது வழங்கி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், புதிய தொழில்நுட்ப வசதியோடு, தொலைநோக்கு திட்டங்களை கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் ‘யூடிஎஸ்’ செயலி போன்றவற்றை செயல்படுத்துவதில், இந்த மையத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. தெற்கு ரயில்வேயின் தொழில்நுட்ப திறனை பாராட்டும் வகையில், ‘ஸ்கோச்’ விருது வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.