மும்பை: மும்பையின் கோரேகானில் உள்ள ஜி+5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ட்டுள்ளத. இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு கோரேகானில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள தரை தளம் மற்றும் 5 மாடிகள் அடுக்குமா மாடி கட்டிடத்தில், இன்று அதிகாலை 3:50 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளிலும் பரவியதால், அங்கு குடியிருந்தோர் வெளியே வர முடியாமல் புகையில் சிக்கி தவித்தனர். இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 46 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள HBT ட்ராமா மருத்துவமனையிலும், கூப்பர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, காலை 6 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.