சனிக்கிழமையன்று, அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) ஏற்பாடு செய்த மூன்று-நாள் ORF- கல்பனா சாவ்லா விண்வெளி கொள்கை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இஸ்ரோவின் புகழ்பெற்ற பேராசிரியரும் பிரம்மோஸ் விண்வெளி திட்டத்தின் முன்னாள் தலைவரான சிவதானு பிள்ளை இதில் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், ” 2030 ஆம் ஆண்டில் சந்திரனிலிருந்து கிடைக்கும் ஹீலியம் -3 கொண்டு இந்தியா மின்சாரம் தயாரித்து, தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்.
சிவதானு பிள்ளை, ” ஹீலியம் -3 அதிகமாக உள்ள சந்திர தூசியை தோண்டி எடுப்பதே இஸ்ரோவின் முதன்மையான திட்டம். இந்த இலக்கை 2030 ஆம் ஆண்டில் இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்திவிடும்” என்று கூறினார்.
பிற நாடுகளும் இத்திட்டத்தில் வேலை செய்துகொண்டு இருக்கின்றன. மொத்த உலகின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும்அளவிற்கு சந்திரனில் போதுமான ஹீலியம் உள்ளதாக ஒரு ORF அறிக்கையைத் தெரிவிக்கிறது.
“ஒரு சில வருடங்களில், மக்கள் தேன் நிலவிற்காக நிலவிற்கு செல்வார்கள்,” என்று அவர் புன்னகையுடன் கூறினார்.
இந்திய இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பி.எம்.பாலி, இயக்குனர் ஜெனரல், தோற்றம் திட்டமிடல், “இந்தியாவின் முதல் இராணுவ செயற்கைக்கோளான GSAT-7ன் விண்ணில் செலுத்தப்பட்டதும், தேசிய பாதுகாப்பிற்காக விண்வெளியைப் பயன்படுத்துவது நாட்டின் தொலைநோக்கு பார்வைக்கு சாட்சியமாகும் “என்று கூறினார்.
அவர் இந்தியாவிடம் மிகப்பெரிய விண்வெளி தொடர்பும் ஆசிய பசிபிக்கை உள்ளடக்கிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் விண்வெளி திட்டம் ஒரு சீரான வேகத்தில் வளர்ந்து உலகளாவிய சக்தியாக மாற்றியுள்ளது என்று லெப்டினென்ட் ஜெனரல் பாலி கூறினார்.