மதுரை:
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற நடிகர் சிவகுமார், தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டி விட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு மதுரையில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டு, பின்னர் புது செல்போன் வாங்கி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இயக்குனர் மற்றும் எழுத்தாளரான ராமதாஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சிவக்குமார் சென்று இருந்தார். அங்கு இருந்த நபர் ஒருவர் சிவக்குமாருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க அவரது முகத்து நேராக செல்போனைநீட்டிய போது, எரிச்சல் அடைந்த சிவக்குமார் அதனை, சிரித்த முகத்தோடு தட்டிவிட்டு சென்றார்.
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் சிவகுமாரின் செயல் குறித்து கலாய்த்து வருகின்றனர்.