சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதையறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால்,பல திரைப்படங்கள் வெயியாக முடியாத சூழல் நிலவி வந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தியேட்டர்களிலும் 50 சதவிகித இருக்கைகளுடன் படங்களை ஓட்ட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே ஓரளவு படிப்பிடிப்பு முடிந்து வெளியாக தயாராக இருந்த சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் ’டான்’ திரைப்படம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சிபி சக்கரவர்த்தி. அனிருத் இசை அமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக, பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர் ’டாக்டர்’ படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, முனிஷ் காந்த், பாலசரவணன், காளி வெங்கட் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.
கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.