லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’.

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து ‘மாஸ்டர்’ பின்வாங்கியது. தற்போது பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளிக்கு டீஸரை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்தது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடியான ட்ரைலர் வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் டீஸர் குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் பட்டாசாக இருக்கு மாஸ்டர் டீஸர். தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நம்ம ராக்ஸ்டார் அனிருத், இயக்குனர் லோகேஷ் எல்லாரும் சிறப்பு என்று பதிவிட்டு, ஒட்டுமொத்த மாஸ்டர் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை கூறினார் சிவகார்த்திகேயன்.