நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலை தடுக்க தமிழகஅரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதுடன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பல தற்காலிக மருத்துவ முகாம்கள், மருத்துவமனைகளை கட்டமைத்து வருகிறது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா தொற்று உச்சம்பெற்றுள்ளது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.இந்த ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயனன் மூலம் தயாரித்து தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.