சென்னை,

சிவாஜி மணி மண்டப விழா விழால் ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும் என்று பிரபு அழைப்பு விடுத்துள்ளார்

நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் தமிழக அரசின் சார்பில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. நாளை அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மணி மண்டபம் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் திறந்து வைப்பார்கள் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என்று அறிவித்து விட்டு, தற்போது அமைச்சர்கள் திறந்து வைப்பார்கள் என்று அரசு அறிவித்தது,  சிவாஜி ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்தின ருக்கும் வேதனை அளித்துள்ளது.  இதற்கு  திரையுலகை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் நேரில் சென்று திறந்து வைத்திருப்பார் என்று பிரபு வருத்தப்பட்டு அறிக்கை வெயிட்டிருந்தார்.

இந்நிலையில், சிவாஜி மணிமண்டப விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைப்பார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதை சிவாஜி குடும்பத்தார் வரவேற்ற னர்.இதுகுறித்து நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தார், செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஓபிஎஸ் திறப்பதை வரவேற்பதாகவும்,  சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது என்றும் கூறினர்.

மேலும், இந்த விழாவுக்கு  திமுக தலைவரையும் அழைப்பார்கள் என நம்புவதாகவும், திமுக., தலைவர் கருணாநிதிதான் சிவாஜி  சிலையை ஏற்கனவே கடற்கரையில் வைத்தார் என்பதையும் நினைவு கூர்ந்தனர்.

இந்த மணி மண்டபம் திறப்பு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களும்  பங்கேற்க வேண்டும் என்றும்,  சிவாஜியின் அன்புள்ளவர்கள் அனைவரும் மணிமண்டப விழாவில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு பிரபு கூறினார்.