தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கவேண்டும் மேலும், PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கூறியுள்ளார்.
தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு துருவித் துருவி விசாரணை மேற்கொள்ளும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகள் தேர்தல் பத்திர விவகாரத்தில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.
மேலும், பணமதிப்பிழப்பை அடுத்து நாட்டில் நடைபெற்றுள்ள இரண்டாவது பெரிய ஊழலான தேர்தல் பத்திரம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேபோல், PM-CARES க்கு யார் நன்கொடை அளித்தார்கள் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் அதுவும் பெரிய விஷயம் என்று கூறினார்.