தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவை, அன்னை தெரசா என்று விளித்து, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதை கண்ட நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்….
தமிழகத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக கட்சித்தொடங்கிய நடிகர் விஜயகாந்துக்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அதை பல தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தின. எப்போது, கட்சிக்குள் அவரது மனைவியும், மைத்துனரும் கால் வைத்தார்களோ அன்றுமுதல் தேமுதிக அழிவை நோக்கி செல்லத்தொடங்கியது… இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்….
தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துவரை பெற்று முன்னேறிய விஜயகாந்த் கட்சி, அவரது மனைவியின் தலையீட்டால் இன்று அரசியல் அனாதையாகி நிற்கிறது… பிரேமலதாவின் பண வேட்டை, அரசியல் வேட்கை, தான்தோன்றித்தனமாக பேச்சு காரணமாக ஏற்கனவே தேமுதிகவின் தூண்களாக இருந்த சந்திரகுமார் உள்பட பல நிர்வாகிகள் தேமுதிகவை விட்டு வெளியேறினர்.
விஜயகாந்தை பேசா மடந்தையாக உட்காரவைத்து, அவரை வைத்து கட்சி நடத்தி வரும் பிரேமலதா, திமுகவை தில்லுமுல்லு கட்சி என்றும், அதிமுக எம்.பி.க்களும் தமிழகத்திற்கு ஏதும் செய்யவில்லை என்று சாடினார்.
கூட்டணியில் இருந்துகொண்டே கூட்டணி கட்சியை விமர்சித்து வரும் பிரேமலதாவின் ஆணவ அரசியலை எந்தவொரு கட்சியும் வரவேற்கவில்லை என்பதே… தற்போது தேமுதிக தனித்து விடப்பட்டுள்ளதற்கு சாட்சி…
தமிழக அரசியலில் திருப்புமுனை என்று மாநாடுகளை நடத்தி, தனது மேதாவித்தனத்தை காட்டிய பிரேமலதா, பணம் ஒன்றையே குறிக்கோளாக எண்ணி தேர்தலுக்கு தேர்தல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அரசியலில் தான் ஒரு ஞானசூனியம் என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்து வருகிறார்…
அதே வேளையில், அவரது சகோதரர் எல்.கே.சுதீஷ்-ன் சொத்து மதிப்பு மட்டும் ப…………………..ல மடங்கு உயர்ந்து உள்ளது..
கடந்த 2014-ம் ஆண்டைய அவரது சொத்துமதிப்பு 33 கோடியே 91 லட்சமாக இருந்தது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு, அவரது சொத்து மதிப்பு 77 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக அசையாக சொத்துகளின் மதிப்பு 336% அதிகரித்துள்ளது.
வருமான வரித்துறைக்க தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரத்தில், தனது குடும்பத்தின் பெயரிலும் 60 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளது என்றும், இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.17.18 கோடி. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.42.99 கோடி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்து பணத்தை குவித்து வரும் பிரேமலதா…. அன்னை தெரசாவாம்… அவரது தீவிர ஆதரவாளர் ஒருவர், அவரை வாழும் அன்னை தெரசா என்று விளித்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்…
அன்னை தெரசா… யார்… அவர் எப்படிப்பட்டவர்.. அவரது பணி என்ன? என்று தெரியாத இந்த அடிவருடிகள்… அன்னை தெரசா ரேஞ்சுக்கு அவரை உயர்த்திபிடித்துள்ளதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்….
தேமுதிக கட்சி நாசமாக போவதற்கே பிரேமலதாதான் காரணம் என்று செமுக வலைதளங்களில் ஏராளமானோர் கழுவி ஊற்றி வருகின்றனர்….