சென்னை : எஸ்ஐஆர் பணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் சீர்திருத்த பணிகள் (SIR) நவம்பர் 4ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு அலுவலர்களை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் உதவவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் இது தொடர்பாக பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த பணிகள் முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் அலுவலர்கள் அதற்குறிய நிரப்பப்பட்ட பாரங்களை வாங்கி, அதை இணையதளத்தில் பதிவேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாநகர தேர்தல் அலுவலரான மாநகராட்சிஆணையர் குமரகுருபரன் இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்படுகிறது.