சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் பணி நவம்பர் 4ந்தேதி தொடங்கும் நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேற்று (அக்டோபர்27ந்தேதி) மாலை செய்தியாளர்களை சந்தித்தபோது, 2வது கட்டமாக தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், வரும் நவம்பர் 4ந்தேதி முதல் அதற்கான பணிகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தமிழக தேர்தல் ஆணையர், தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 4ந்தேதி முதல் வாக்காளர் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளதால், அதுகுறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களை கோரி உள்ளார்.
முன்னதாக, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (SIR) தொடர்பாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சரியான வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணி நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது என்றார்.
ஏற்கனவே பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து 2வது கட்டமாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் என்றவர், இதற்கான பணிகள் வரும் 4ந்தேதி தொடங்கும் என அறிவித்தார்.
இந்த பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு இன்றுமுதல் பயிற்சி அளிக்கப்படும் என்றவர், 3மூன்று கணக்கெடுப்பு பணிக்கு அதிகாரிகள் வீடு தேடி வருவார்கள் என்றவர், இந்த பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளது. இவை முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9ஆம் தேதி வெளியிடப்படும் என்றார். பின்னர், அதன்மீதான சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் என கூறிய தேர்தல் ஆணையர், வாக்காளர்களை உறுதி செய்ய 3 முறை தேர்தல் அதிகாரிகள் வீடுகளுக்கு வருவார்கள். எந்த ஒரு தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இதற்கு ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்கள் பெறப்படும். தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ள 12 மாநிலங்களில் இன்று (அக் 28) இரவு 12 மணியிலிருந்து முழுமையாக நிறுத்தி வைக்கப்படும். அதன்பின் வாக்காளர் பட்டியலில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது.
வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியல் பணிகள் முடிந்து வெளியாகும் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தான் 12 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்
தேர்தல் ஆணையம். கடந்த 1951 முதல் 2004 வரை 8 முறை சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது 9-வது முறையாகும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது. நவம்பர் 29ம் தேதி மாலை 4 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது . இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://patrikai.com/lets-stop-the-disenfranchisement-lets-stop-vote-rigging-chief-minister-stalin-x-post-against-sir/