2022 ம் ஆண்டின் பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ ஓர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் நேற்றிரவு நடைபெற்றது.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டவர்கள் இந்த அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர்.

அதில், கர்நாடகாவைச் சேர்ந்த ஷினி ஷெட்டி இந்த ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார்.
மும்பையில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்தவரான ஷினி ஷெட்டிக்கு 21 வயது, அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவரான இவர் தற்போது சி.எப்.ஏ. படித்து வருகிறார் அதோடு பரதநாட்டிய கலைஞராகவும் உள்ளார்.

இந்தப் போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த ருபல் ஷெகாவத் இரண்டாவது இடத்தையும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷினதா சவுகான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கீர்த்தி ஷானோனின் மயக்கவைக்கும் நடனம் இடம்பெற்றது.
[youtube-feed feed=1]