பின்னணி பாடகர் எஸ்பி,பாலசுப்ர மணியம் கடந்த 5ம் தேதி தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது உடல்நிலை ஓரிரு தினங் களில் கவலைக்கிடமானது.
எஸ்பிபி குணம் அடைய வேண்டி திரையுல கினர் மற்றும் உலகம் முழு வதும் உள்ள அவரது ரசிகர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். வென்டிலேட்டர், எக்மோ சிகிச்சைகள் அவருக்கு டாக்டர்கள் அளித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் மிக ஆபத்தான கட்டத்துக்கு சென்றவர் மெல்ல மீண்டு வருகிறார். அவரது மகன் சரண் தினமும் தந்தையின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றி தெரிவித்து வருகிறார்.
தன்னை அடையாளம் கண்டுகொண்டார். பாட்டு கேட்டு தாளம்போடுகிறார் என பல்வேறு விவரங்களை அவர் தெரிவித் தார்.

எஸ்பிபி உடல்நிலை பற்றி மருத்துவ மனை இன்று வெளியிட்ட அறிக்கை யில்,’எஸ்பிபிக்கு வென்ட்டிலேட்டர் எக்மோ சிகிச்சை தொடர்ந்து தரப்படு கிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்று முழுமையாக கண்விழித்தார். கேட்கும் கேள்விகளுக்கு நன்கு பதில் அளித்து ரெஸ்பான்ஸ் செய்தார். பிசியோதெரபி சிகிச்சையில் சுறுசுறுப்பாக பங்கெடுத்துக் கொண்டார். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]