சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னெடுத்துள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் பாயும் கூவம், அடையாறு ஆறு மறுசீரமைப்பு குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியதும் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின்போது சிங்காரச் சென்னை 2.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அது தொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் குவிந்துள்ள கழிவுகைளை அகற்றி, சென்னையை சுத்தப்படுத்தும் பணிகளை விரைவு படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.