நேபாளம், சிங்கப்பூர் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் சிங்கப்பூர் மற்றுமூ ஜிம்பாப்வே அணிகள் மோதின.
மழையால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய சிங்கப்பூர் அணி 18 ஓவர்களின் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை அடித்துவிட்டது.
அந்த அணியின் டிம் டேவிட் மற்றும் மன்பிரீத் சிங் ஆகியோர் தலா 41 ரன்களை எடுத்தனர். ரோகன் ரங்கராஜன் 39 ரன்களும்இ சுரேந்திரன் சந்திரமோகன் 23 ரன்களும் அடித்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் ரியான் பர்ல் 3 விக்கெட்களும், கரவா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் கடினமான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு, தொடக்க வீரர் 48 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
சீன் வில்லியம்ஸ் 66 ரன்களையும், முட்டோம்போட்ஸி 32 ரன்களையும் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கம்தான். இறுதியில், 18 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது ஜிம்பாப்வே அணியால்.
சிங்கப்பூர் தரப்பில் மஹ்பூப் மற்றும் பிரகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐசிசி அமைப்பின் முழு அங்கீகாரம் பெற்ற ஒரு அணியை முதன்முறையாக வீழ்த்தி, மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது சிங்கப்பூர் அணி.