மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளும் பிரீதலைசர் எனும் புதிய முயற்சிக்கு சிங்கப்பூர் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
கொரோனா பரிசோதனைக்கு தற்போதுள்ள வழிமுறைகளுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள இந்த புதிய முயற்சியை பரிட்சார்த்தமாக அனுமதித்துள்ளது சிங்கப்பூர்.
குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வருபவர்களை பரிசோதிக்கும் கருவி போன்று உள்ள இந்த பிரீதலைசர் மூலம் மூச்சு காற்றில் இருந்து வெளியேறும் நுண்துகள்களை கொண்டு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும்.
இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றால், ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை விரைவாகவும் எளிதாகவும் தெரிந்துகொள்ள முடியும்.
பிரீதலைசர் கருவியை மருத்துவ பணியாளர்கள் தவிர யார் வேண்டுமானாலும் எளிதாக கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
180 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 95 சதவீத செயல்திறன் உள்ளது தரவுகள் மூலம் தெரியவந்திருக்கிறது.