மே 16 அன்று வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’…..!

அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோர் நடிக்கும் படம் சிந்துபாத்.

இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை வாசன் மூவீஸ் மற்றும் கே புரோடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தில் தனது மகன் சூர்யாவை விஜய் சேதுபதி அறிமுகம் செய்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று வெளியானது. தற்போது படப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ‘சிந்துபாத்’ திரைப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Anjali, Arunkumar, may 16, Vijaysethupathy
-=-