
விஜய் சேதுபதி நடிப்பில் ’சிந்துபாத்’ மற்றும் தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என இந்த இரு திரைப்படங்ளையும் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ஹைதராபாத் நீதிமன்றம் .
இந்த இரு படங்களையும் பாகுபலி’ இரண்டாம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட கேப்டன் என்ற நிறுவனத்தின் சார்பில் ராஜராஜன் என்பவர் வெளியிட இருந்தார்.
ஆனால் பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு 17 கோடி ரூபாய் பணத்தை கேப்டன் நிறுவனம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால், ‘சிந்துபாத்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வுக்கு தடைவிதிக்கக் கோரி பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில், ‘இரு படங்களையும் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ஹைதராபாத் நீதிமன்றம். .
[youtube-feed feed=1]