கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு பதக்கத்தில் உரிமை இல்லை!: கவிஞர் ராஜாத்தி சல்மா ஆதங்கம்

Must read

நெட்டிசன் பகுதி:
ற்போது பிரேசிலில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிந்து, சாக்ஷி ஆகியோர் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.  இந்த நிலையில், கவிஞர் ராஜாத்தி சல்மா (Rajathi Salma) தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
“சில மாதங்களுக்கு முன் நண்பனின் உணவகத்தில் இரவு உணவுக்கு சென்றிருந்தேன். பத்து மணிக்கும் மேல் ஆகி விட்டபடியால் கஸ்டமர் யாரும் இல்லை. உணவகத்தை ஒரு இளைஞன் தரையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தான் அவனது தோற்றம் ஒரு விளையாட்டு வீரனுக்கு உரியதாக தெரிய நண்பனிடம் கேட்டேன்

சிந்து - சாக்ஷி - சல்மா
சிந்து – சாக்ஷி – சல்மா

ஆமாம் இவன் ஆணழகன் போட்டியில் பல பரிசுகளை மாவட்ட அளவில் வென்றிருக்கிறான் இன்னும் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுதான் இருக்கிறான் வறுமை சரியான உணவு இல்லாமல் இங்கே பணி புரிகிறான். இரவு முழுக்க இங்கே வேலை செய்வான் நல்ல உணவு அவனது பயிற்சிக்கு தேவை அல்லவா காலை ஒரு ஜிம்மில் வேலை. கடுமையான உழைப்பாளி. அவனது கனவு இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வெல்வதுதான். தணிவான குரலில் எனது நண்பன் கூறிய செய்தி என் இதயத்தை உருக வைக்க்கூடியதாக இருந்தது.
அந்த இளைஞன் முகம் சற்று கூச்சத்துடன் இருக்க என்னை பார்ப்பதை தவிர்த்தபடி தரையை துடைத்துக்கொண்டிருந்தவனை நானும் கவனிக்காதவளாக நடித்து விட்டு அங்கிருந்து வெளியேறினேன்.
கேடு கெட்ட அரசியல்வாதிகளும் அவர்கள் குவிக்கும் கோடிகளும் -:(
இன்று நமக்குக்கிடைத்திருக்கும் பதக்கங்குக்கு உரிமை கொண்டாட அந்த பெண்களும் அவர்களது குடும்பங்களுக்கும் தான் உரிமை இருக்கிறதே தவிர இந்த நாட்டு பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கல்ல!”

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article