கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் சிந்து மற்றும் சாய் பிரனீத் ஆகியோர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, இந்தோனேஷியாவின் மரிஷ்காவை வீழ்த்தினார். இவர் முதல் இரண்டு சுற்றுகளையும் 22-20 மற்றும் 21-18 ஆகிய செட்களில் கைப்பற்றினார்.

பெண்கள் பிரிவு இப்படியென்றால், ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத், சீனாவின் முக்கிய வீரர் லின் டானை எதிர்கொண்டார். முதல் இரண்டு சுற்றுகளையும் 21-14 மற்றும் 21-17 என்ற நேர் செட்களில் வென்றார்.

அதேசமயம், இந்திய வீரர் கஷ்யப், தாய்லாந்தின் தம்மாசினிடம் வீழ்ந்தார். மற்றொரு வீரர் செளரப் வர்மா, நெதர்லாந்தின் மார்க்கிடம் வீழ்ந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரான்கி ரெட்டி – சிராக் ஷெட்டி இணை, தென்கொரிய இணையை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்குள் நம்பிக்கையுடன் நுழைந்துள்ளது.