டில்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, அவர் கைது செய்யப்பட்டு விட்ட நிலையில், மனு காலாவதியானதாக கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கில் டில்லி உயர்நீதி மன்றம் சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்டதை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து கைது செய்தனர். அவரை நீதிமன்றம் இன்றுவரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டது. அவரது சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைய உள்ளது.அதே வேளையில்  பண மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறையும் முயன்று வருகிறது.

இதுதொடர்பாக இரண்டு மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒரு மனு அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய கூடாது என்றும், மற்றொரு மனு,  சிதம்பரத்தின் முன் ஜமீனை டெல்லி உயர்நீதி மன்றம்  நீக்கியதற்கு எதிர்த்தும் தொடரப்படமமழ,

இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது சிதம்பரம் தரப்பில் பிரபல வழக்கறிஞர் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜனாரார்.  அரசு தரப்பில் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, ஏ எஸ் போபண்ணா அமர்வில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது,  கபில் சிபல் தனது வாதத்தில், சிதம்பரத்தின் மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் முன்பே கைது செய்துவிட்டனர். உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் முன் சிதம்பரத்தை கைது செய்தது தவறு. சிதம்பரத்திற்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் விசாரணைக்கு முன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் .நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பின் கைது செய்வது நீதிக்கு எதிரானது. நீதிமன்றத்தை மீறி இந்த கைது நடந்துள்ளது என்றார்.

தொடர்ந்து வாதாடியா அபிஷேக் மனு சிங்வி தனது வாதத்தில், முன் ஜாமீன் மனுவை விசாரிப்ப தாக உச்ச நீதிமன்றம் கூறியது எல்லோருக்கும் தெரியும். சிபிஐ தரப்பு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் கூறியது தெரியும். ஆனால் அனைத்தையும் மீறி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் நீதிபதிகள் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களின்  வாதத்தை ஏற்க மறுத்து விட்டனர். மேலும், இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு காலாவதி ஆகி விட்டதாக கூறி  தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

ப.சிதம்பரம்  ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதால் முன் ஜாமீன் வழக்கை விசாரிக்க முடியாது என்று  அறிவித்து விட்டது.

தொடர்ந்து அமலாக்கத்துறை கைது செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கறில் விசாரணை நடைபெற்று வருகிறது.