வி.ஐ.பி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.

கமல், விஜய், அஜித், சூர்யா , ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த சிம்ரன் கடந்த 2003-ம் ஆண்டு தீபக் என்ற தனது சிறு வயது நண்பரை திருமணம் செய்துக் கொண்டார் சிம்ரன்.

இவர்களுக்கு அதீப் மற்றும் ஆதித் வீர் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது மகன்களுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை சிம்ரனின் மகன்களா என ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.