கொரோனா 2-ம் அலை இந்தியாவில் படு வேகமாக பரவி வருகிறது. அதோடு பல உயிர்களையும் பலி வாங்கியிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதோடு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் நாள்தோறும் வரும் இறப்பு செய்திகள் நம்மை ஒருவித அழுத்தத்திற்குள்ளாக்குகின்றன.

இதனால் பிரபலங்கள் பலரும் வீட்டிலிருந்தவாறு தங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சிம்ரன் லாக்டவுனில் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இத்தனை வயதிலும் தன் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் சிம்ரனை புகழ்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.