சென்னை: பஞ்சாப் அணி நிர்ணயித்த வெறும் 121 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிவருகிறது ஐதராபாத் அணி.
ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்தது பஞ்சாப் அணி. ஆனால், அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மென்கள் அனைவருமே சொதப்பினர்.
கேப்டன் கேஎல் ராகுல் 4 ரன்களையும், மயங்க் அகர்வால் 22 ரன்களையும், கிறிஸ் கெய்ல் 15 ரன்களையும் அடித்தனர். அதேசமயம், இவர்கள் அனைவருமே, ரன்களைவிட அதிக பந்துகளை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிக்கோலஸ் பூரான் ரன் எடுக்காமலேயே ரன்அவுட் ஆனார். தீபக் ஹூடா 13 ரன்களையும், ஹென்ரிக்யூஸ் 14 ரன்களையும், ஷாருக்கான் 22 ரன்களையும் அடித்தனர்.
முடிவில், 19.4 ஓவர்களிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 120 ரன்களை மட்டுமே சேர்த்தது பஞ்சாப் அணி. அந்த அணியில் 2 பேர் ரன்அவுட் செய்யப்பட்டனர்.
தற்போது, எளிய இலக்கை விரட்டிவரும் ஐதராபாத் அணி, 10 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி, 73 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில், இன்றையப் போட்டிக்கு கேன் வில்லியம்சன் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.