சிம்புவின் ‘மாநாடு’ கை விடப்பட்டது..
சிம்பு என்ற சிலம்பரசன் நடிக்க வெங்கட்பிரபு இயக்க’ மாநாடு’’ என்ற படத்துக்கான அறிவிப்பு ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், சிம்புவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானதால், படத்தை ’’டிராப்’’ செய்வதாக அறிவித்தார், காமாட்சி.
சில பல சமரச முயற்சிகளுக்குப் பிறகு ‘’மாநாடு’’ மீண்டும் உயிர் பெற்றது.
சிம்புவுக்கு ஜோடியாகக் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பதாகவும், இவர்கள் தவிர, இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பதாகவும் செய்திகள் வெளியானது.
20 நாட்கள் ’ஷுட்டிங்’ நடந்த நிலையில், ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், ’’மாநாடு’’ படம் நிரந்தரமாக கை விடப்பட்டு விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏன்?
மீண்டும் கருத்து வேறுபாடா?
இல்லை.
மாநாடு, நடப்பு அரசியல் குறித்துப் பேசும் படம். பல காட்சிகளில் பெரும் கூட்டம் தேவைப்படுகிறது.
ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதிக பட்சமாக 80 பேர் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க முடியும்.
எனவே சிம்புவின் மாநாடு ‘ரத்து’’ செய்யப்பட்டுள்ளது.
-பா.பாரதி.