
தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்பதால், நாளை ( பி்ப்: 28) முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக டி.ராஜேந்தர் சலசப்பை கிளப்பியுள்ளார்.
பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், லட்சிய தி.மு.க என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 24ம் தேதி அவரது அலுவலகத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தார். அந் நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “’வரும் 28-ம் தேதி, என் அரசியல் வாழ்வின் முக்கிய முடிவை அறிவிப்பேன்’ என்று சலசலப்பை கிளப்பினார்.
இந்நிலையில், இன்று திருச்சியில் பேட்டியளித்த அவர், “தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்ற முடிவில் நாளை முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன். மாற்றத்தைக் கொண்டுவருகிறேனோ இல்லையோ, எனது முடிவில் தடுமாற்றம் இருக்காது” என்றார்.
மேலும், “என் மகன் சிலம்பரசன், கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேசக்கூடியவர். மேலும், ஜாதகம் நன்றாக உள்ளவர்கள் தமிழக அரசியலில் ஜெயிப்பார்கள்’ என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]