
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
தற்போது தனது உடலமைப்பை முழுமையாக மாற்றிவிட்டார் சிம்பு. சுமார் 20 கிலோ வரை குறைத்துள்ளார்.
மேலும், அவர் எந்தவொரு சமூக ஊடகத்திலும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு அனைத்து சமூக ஊடகங்களிடம் இருந்து சிம்பு விலகினார்.
தற்போது மீண்டும் சமூக வலைதளத்துக்கு வர முடிவு செய்துள்ளார் சிம்பு. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அக்டோபர் 22-ம் தேதி வெளிவரவுள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்திலுமே மீண்டும் சிம்பு இணையவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
Patrikai.com official YouTube Channel