சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் ‘சக்கப் போடு போடு ராஜா’. இப்படத்தை விடிவி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்கிறார்.
இதைப்பற்றி சிம்பு கூறுகையில்,
“இதற்கு முன்பே பல படங்களில் இசையமைக்க என்னிடம் கேட்டார்கள், படத்தில் நடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என கூறிவிட்டேன், இப்போது கேட்கும் பொழுது படத்தின் கதை பிடித்திருந்தது, அதனால் ஒப்புக்கொண்டேன். சந்தானம் என் நண்பர், அவர் படமாக இல்லாமல் இருந்திருந்தால் ஒப்புக்கொள்வதில் சந்தேகம் தான்.” என்று கூறியுள்ளார்.