மும்பை:
ந்தியாவின் ‘வெள்ளி மங்கை’ சிந்து பற்றி தரம் தாழ்ந்து தலைப்பிட்டு விமர்சித்ததால் மும்பை மீரர் பத்திரிகை சர்ச்சையில் சிக்கி உள்ளது.
வாசகர்களை கவர்வதற்காக, வித்தியாசமான  தலைப்பு எழுதுகிறேன்  என்று எசகு பிசகாக எதையாவது எழுதுவது  சில நாளிதழ்களுக்கு வழக்கம். அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது மும்பை மிரர் நாளிதழ்.
Untitled-1
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவை,  இந்தியாவே கொண்டாடிவரும் வேளையில் அவரது பயிற்சியாளரின் மனைவி அளித்த பேட்டிக்கான தலைப்பை மும்பை மிரர் பத்திரிக்கை திரித்து ஆபாசமாக வெளியிட்டு வாசகர்களின் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது.
பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவின் பயிற்சியாளர் புல்லெல்லா கோபிசந்த். இவர் சாய்னா நேவால், சிந்து போன்ற சாதனை வீராங்கனைகளை உருவாக்கியவர். இவரது மனைவி லட்சுமி கோபிசந்தும் ஒரு முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஆவார். இவர் 1996-இல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாடியவர்.
சிந்துவுக்கு பயிற்சியாளராக எனது கணவர் அமைந்தது போல எனக்கும் அவர் பயிற்சியாளராக அமைந்திருந்தால் நானும் சாதனை படைத்திருப்பேன் என்ற அர்த்தத்தில் லட்சுமி கோபிசந்த் சொன்னதை சற்று ஆபாசமாக பொருள்படும் வகை யில் திரித்து செய்தித்தலைப்பாக மும்பை மிரர் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த ஆபாச வார்த்தை விளையாட்டுதான் இப்போது வாசகர்களின் கோபத்தை கிளறி விட்டிருக்கிறது.  சமூகப் பொறுப்புள்ள ஒரு பிரபல நாளிதழ்  கீழ்தரமான வகையில் நடந்து கொண்டதை பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்ச்சித்து வருகிறார்கள்.