வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த 33 நாட்களாக போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ஊழியர்களில் ஒரு பகுதியினரின் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இந்நிலையில், சம்பளம் இன்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு அமெரிக்க வாழ் சீக்கிய மீனவர்கள் சூடான உணவு கொடுத்தனர்.

அமெரிக்காவில் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மிகக் குறைவு.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிராகரித்தார்.

இதனையடுத்து, 8 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். எனினும், பணியில் இருக்கும் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இண்டியானா மாகாண சீக்கிய மீனவர் சமுதாயத்தினரும் தேசிய சீக்கிய அரசியல் நடவடிக்கை குழுவினரும் இணைந்து, பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு உணவும், நிதி உதவியும் வழங்கினர்.

சீக்கியர்கள் செய்த உதவிக்கு போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சீக்கியர்கள் அளித்து வரும் உதவியை அறிந்து அங்குள்ள மளிகைக் கடைகளில் பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதைப் பார்த்த சீக்கிய கோயில்கள் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ஊழியர்களுக்கு தேவைப்படும் போது உதவுவார்கள் என்று நம்புகிறோம் என்று சீக்கிய அமைப்பினர் தெரிவித்தனர்.