எகிப்து பிரமிடுகளில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் “சிகை கொற்றன்” கல்வெட்டு குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து சங்ககாலத் தமிழர்களின் எகிப்து தொடர்பு மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.
வரலாற்றாளர்கள் கூறுவது என்னவெனில் – பிரமிடுகள், கல்வெட்டுகள் குறித்த விவகாரம் தனியே ஆராய வேண்டிய ஒன்று; ஆனால் தமிழர்களின் எகிப்து வர்த்தகத் தொடர்பு பற்றி உறுதியான ஆவணங்கள் ஏற்கனவே உள்ளன.
அதில் மிக முக்கியமானது “வியன்னா பாப்பிரஸ்” என அழைக்கப்படும் Muziris Papyrus ஆவணம்.

பாப்பிரஸ் ஒப்பந்தம் – PAPYRUS AGREEMENT
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், சேரர்களின் புகழ்பெற்ற துறைமுகமான Muziris (முசிறி) மற்றும் எகிப்தின் Alexandria வணிகர்களுக்கு இடையே ஏற்பட்ட கடன்–பொருள் பரிமாற்ற ஒப்பந்தமே இந்த ஆவணம்.
இந்த ஒப்பந்தத்தில்:
“ஹெர்மாப்பொல்லான்” கப்பலில் ஏற்றப்பட்ட சரக்குகளின் மொத்த மதிப்பு, அன்றைய எகிப்தில் 2,400 ஏக்கர் நிலத்துக்கு சமம் என கணக்கிடப்பட்டுள்ளது.
அலெக்சாண்ட்ரியாவில் செலுத்த வேண்டிய 25% சுங்கவரி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விதிகள், கடன் பொறுப்புகள், சரக்கு மதிப்பீடு போன்ற விவரங்கள் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது சங்ககாலத் தமிழகத்தில் சர்வதேச வணிகச் சட்டங்களும், சீரான அரசு நிர்வாகமும் இருந்ததற்கான வலுவான ஆதாரமாக கருதப்படுகிறது.
ஆவணத்தில் உள்ள சுவாரசிய கணக்குகள்
கங்கையிலிருந்து வந்த நறுமணப்பொருள் (நார்ட்) – 60 பெட்டிகள்
ஒரு பெட்டியின் மதிப்பு: 4,500 வெள்ளி திரமம்
அதன் நான்கில் ஒரு பங்கு சுங்கமாக செலுத்தப்பட வேண்டும்.

“ஹெர்மாபொல்லான்” கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆறு சரக்குப் பொதிகளின் மொத்த மதிப்பு (வெள்ளி நாணயத்தில்!), 1154 தாலந்துகள் மற்றும் 2852 திரமம்.
இந்த அளவிலான கணக்குகள், அன்றைய தமிழக வணிகர்கள் உலக சந்தையில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பதை காட்டுகின்றன.
சமீபத்தில் எகிப்து பிரமிடுகளில் தமிழ் பெயர் போன்ற கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி, இந்தப் பாப்பிரஸ் ஆவணத்துடன் சேர்த்து பேசப்படுகிறது.
முசிறி துறைமுகம், ரோம பேரரசு, எகிப்து, மத்திய கிழக்கு ஆகியவற்றுடன் வலுவான வர்த்தக இணைப்பை கொண்டிருந்தது. மிளகு, நறுமணப்பொருட்கள், தந்தம், நெய்த துணிகள் ஆகியவை தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
இன்றைய “குளோபலைசேஷன்” என்ற சொல் உருவாகும் முன்பே, சங்கத் தமிழர்கள் உலக வர்த்தக வரைபடத்தில் இருந்தனர் என்பதே இந்த ஆவணங்களின் மிகப் பெரிய செய்தி.
“சிகை கொற்றன்” கல்வெட்டு உண்மையா என்பது ஆய்வில் இருக்கலாம். ஆனால் முசிறி–அலெக்சாண்ட்ரியா பாப்பிரஸ் ஒப்பந்தம் சங்கத் தமிழின் சர்வதேச வர்த்தக வலிமையை நிரூபிக்கும் மறுக்க முடியாத ஆதாரம்.
[youtube-feed feed=1]