ஸ்ரீ துர்காதேவியே சரணம் !
ராகுவின் அதி தேவதையான துர்கை. பொதுவாக வடக்கு நோக்கியே காட்சி தருவாள். கதிராமங்கலத்தில் மட்டும் அவள் லட்சுமியின் அம்சமாகத் தாமரைப் பூவில் எழுந்தருளி கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.
கங்கை கொண்ட சோழபுரத்தின் வடக்கு வாயிலில் துர்கைக்குத் தனியே சிறு கோயில் ஒன்று உள்ளது. இங்கு பதினெட்டு கரங்களுடன் துர்கை அருள்பாலிப்பது சிறப்பு.

சிதம்பரம் கிழக்கு கோபுரத்தின் உட்புறம் வடக்கு கோஷ்டத்தில் உள்ள துர்கை பதினெட்டுக் கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
ராமேஸ்வரம் கோயிலில் வெள்ளைக் கல்லாலான துர்கை அருள்பாலிப்பது சிறப்பு.
செஞ்சிக்கும் வந்த வாசிக்கும் இடையில் உள்ளது தாராபுரம். இங்குள்ள ரவிகுல மாணிக்கேஸ்வரர் கோயில் வடக்கு கோஷ்டத்தில் எட்டுக் கரங்களுடன் காட்சி தரும் துர்கையின் ஒரு கரத்தில் கிளி உள்ளது சிறப்பு.
திருநெல்வேலி- கங்கை கொண்டான் என்ற ஊருக்கு அருகிலுள்ள பராஞ்சேரி என்ற தலத்தில் பள்ளி கொண்ட துர்கை சந்நிதி உள்ளது சிறப்பு.
திண்டிவனம்- மரக்காணத்துக்கு இடையில் உள்ள கோயில் ஒன்றில் மகிஷன் மீது நின்ற கோலத்தில் எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறாள் துர்கை. இந்த தேவி சக்கரம், வாள் ஆகிய ஆயுதங்களுடன் கோடரியும் தாங்கியிருப்பது சிறப்பு. இவளின் திருக்கரங்களுள் ஒன்று மானுக்குத் தளிர் தருவது போல் உள்ளதும் சிறப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப் பட்டியில் உள்ள சிவன் குடைவரைக் கோயிலில் மேற்குச் சுவரில் காட்சி தரும் துர்கை தாமரை மலரில் எட்டுக் கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
கும்பகோணத்துக்குத் தென்மேற்கே சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ள பட்டீஸ்வரத்தில் மகிஷன் தலை மீது நின்ற கோலத்தில், சாந்த சொரூபி னியாகக் காட்சி தருகிறாள் துர்கை. இந்த தேவி சிம்ம வாகனத்துடன் கூடிய திரிபங்க நிலையில் எட்டுக் கரங்களுடன் அருள்புரிகிறாள்.

இதே கோயிலின்(தேனுபுரீஸ்வரர் கோயில்) அர்த்தமண்டபத்தில் வடபுற கோஷ்டத்தில் ஆறு கரங்கள் கொண்ட துர்கை காட்சி தருகிறாள். இது அபூர்வமான தரிசனம். இதே கோயிலில் திருச்சுற்று மண்டபத்தின் கிழக்கில் தாமரைப் பீடத்தின் மீது நிற்கும் நிலையில் துர்கை அருள்பாலிக்கிறார். இந்த தேவிக்கு மூன்று கண்கள் உள்ளது சிறப்பு.