மதுரை: திருப்பரங்குன்றம் மலையை ஒரு தரப்பினர் சொந்தம் கொண்டாடும் நிலையில், அது இந்து மக்களுக்கு சொந்தமான மலை மற்றும் தமிழ்க்கடவுள் முருகனி மலை என்பதை நிரூபிக்கும்வ கையில்,  பிப். 2-ம் தேதி முதல்  பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என மலை பாதுகாப்பு இயக்கம் அறிவித்து உள்ளது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி. மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங் கள் தெரிவிக்கின்றன.

7ம் ஆண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்போதே, ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம் பாடலன்மேய நன்னகர் போலும் பரங்குன்றே என திருப்பரங்குன்றம் குறித்து சிலாகித்து பாடியுள்ளார்.

அதுபோல 8ம்ஆம் நூற்றாண்டில்,  இவைகற் றுவல்ல அடியார்பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே என சுந்தரமூர்த்தி நாயனார் பாடி யுள்ளார்.

14ம் நூற்றாண்டிலும்,  செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென் பரங் குன்றிற் பெருமாளே என அருணகிரிநாதர்  பாடியுள்ளார்.

அப்பேற்பட்ட திருப்பரங்குன்றத்தை இன்று இஸ்லாமைச் சேர்ந்த சில அமைப்புகள், அந்த மலையின்மீது ஒரு தர்காவை அமைத்துக் கொண்டு, தை சிங்கந்தர் மலை என ஒரு தரப்பினர் கூறி  சர்ச்சையை உண்டாக்கி வருகின்றனர். இதனால் மக்களிடைய வேற்றுமை தலைதூக்க தொடங்கி உள்ளது.

அது சிக்கந்தர் மலை என்றும், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்றும்  சமீபத்தில், சில இஸ்லாமிய அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு, கோழிகளை வெட்டி பிரியாணி விருந்து போடுவதாக அறிவித்து மக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைக்கும் வகையில், செயல்பட்டனர். இது மக்களிடைய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில்  ராமநாதபுரம்  தொகுதி இஸ்லாமிய எம்.பி.யான, நவாஸ் கனி, ஆய்வு என்ற பெயரில் திருப்பரங்குன்றம் மலை மீது சென்றதுடன்,   தன் ஆதரவாளர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாக,  நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில்  படத்துடன் செய்தி வெளியானது.  இது பெரும் ச்ர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் அமைப்பு உறுதிமொழிக்கு எதிராக,  மத்திய மத மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது,  திருச்சி மாவட்டம், மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமீது, வக்பு வாரிய தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று, தர்கா பகுதியை ஆய்வு செய்தனர். நவாஸ்கனி எம்.பியுடன் மலைக்கு சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மலைக்கு போகும் படிக்கட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன்மீது திமுக அரசும் நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ள மலை பாதுகாப்பு இயக்கம்,  மக்களிடைய கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.முருகப்பெருமான் அருள் பாலிக்கும் சைவ மலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்.
தற்போது சைவக் கடவுளான முருகப் பெருமானை அவமதிக்கும் வகையிலும், இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும் வேண்டும் என்றே திட்டமிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிடுவதற்கும், மலைக்கு அசைவு உணவு கொண்டு செல்லும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்னர்.

இதற்கு தடை விதிக்கவும், திருப்பரங்குன்றம் மலையை அபகரித்து, ஸ்ரீகந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை தடுக்கக் கோரியும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுப்பவர்கள் மீது மதுரை மாவட்ட அரசு நிர்வாகம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிப்ரவரி 2-ம் தேதி திருப்பரங்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமும், வணிகர்களிடமும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் ஒப்படைக்கும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.

“நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்”! மதுரை வழக்கறிஞர் குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம்

பிரியாணி சாப்பிடவில்லை: திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வுதான் செய்தோம்! நவாஸ் கனி எம்.பி.