சித்தார்த் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் மஹா சமுத்திரம். இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் தயாரான இந்த திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடிகர் சர்வானந்த், அதிதி ராவ் ஹைடாரி, அனு இமானுவேல்,ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேஜிஎஃப் பட புகழ் கருடா ராம் வில்லனாக நடித்துள்ளார்.

A.K. என்டர்டெயின்மென்ட் சார்பில் அணில் சங்கரா தயாரித்துள்ள மஹா சமுத்திரம் படத்திற்கு சைட்டன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் மஹா சமுத்திரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.

அறுவை சிகிட்சை ஒன்றுக்காக சித்தார்த் லண்டன் சென்றிருப்பதால், அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று இயக்குனர் அஜய் பூபதி கூறியுள்ளார்.