பெங்களூரு:
கடந்த 12ந்தேதி நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
222 தொகுதிகளுக்கு கடந்த 12ந்தேதி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாஜ, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி தொகுதி அரசியல் கட்சிகளால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பதாமி தொகுதியில் சித்தராமையா முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலுவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
இதுவரை வெளிவந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் காங்கிரசும், பாரதியஜனதாவும் சம அளவிலான எண்ணிக்கையிலேயே முன்னேறி வருகிறது.