மதுரை:

லியக்காவிளை சுங்கச்சவாடியில் எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,  ராமநாத புரத்தில் மீனவர் வேடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதி தாவூத் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் கலியக்காவிளை சோதனை சாவடியில் பணியின்போது, பயங்கரவாதிகளால் எஸ்ஐ வில்சன் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகாவில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் தலைமறைவாகி  பதுங்கி இருந்த  தாவூத் என்ற பயங்கரவாதியை காவல்துறையினர் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலையான நிலையில், தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

மேலும்,  எஸ்ஐ வில்சன் கொலை குற்றவாளிகளுக்கு பண உதவி செய்ததுள்ளதும்  விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து,  ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் தங்கியிருந்த தாவூத் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]